எளிய முறை உடற்பயிற்சி

உடல் நலமாக இருக்க எளிய முறை உடற்பயிற்சி செய்யவேண்டும். தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்துள்ள எளியமுறை உடற் பயிற்சியில் 9 பயிற்சிகள் உள்ளன. அவை 

1.கை பயிற்சி                            2. கால் பயிற்சி                                                  

3. மூச்சுப் பயிற்சி                    4. கண் பயிற்சி                                                  

5. கபாலபதி                               6. மகராசனம் 

7. உடலை தேய்த்தல்               8. உடலை அழுத்துதல் அல்லது 

9. உடலைத் தளர்த்துதல்            அக்குபிரஷர் 

எளியமுறை உடற்பயிற்சி குறிப்புகள்:

  1. 8 வயது முதல் 80 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் எளியமுறை உடற் பயிற்சியை தொடங்கலாம். செய்யலாம்.
  2. ஒவ்வொரு நாளும் காலையில் ஒருவேளை மட்டும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  3. வெறும் வயிற்றில் பயிற்சி செய்ய வேண்டும்.
  4. தரையில் பாய் அல்லது கனத்த விரிப்பு விரித்து  அதன் மீது தான் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
  5. கண்களை மூடிய நிலையில்  அனைத்து பயிற்சிகளையும் செய்ய வேண்டும். ஒரு சில  பயிற்சிகளை மட்டும் கண்களை திறந்து வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். 
  6. கண்களை மூடிய நிலையில் உடலில் எங்கு அசைவு நடைபெறுகிறதோ அங்கு மனதை செலுத்த வேண்டும்.
  7.  அசைவுகள் நிதானமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும். எவ்வித அவசர அசைவுக்கும்,  உணர்வும் இடம் கொடுக்காமல் பயிற்சிகளை செய்ய வேண்டும். இப்பயிற்சியில் வியர்வை வராது.
  8. எல்லா பயிற்சிகளையும் 30 நிமிடங்களில் செய்து முடிக்கலாம்.
  9. எல்லா பயிற்சிகளையும் செய்து முடித்த பிறகு, சிறிதளவு தண்ணீர் அல்லது நீர்ம உணவு அருந்தலாம். பயிற்சி முடிந்து 15 நிமிடங்களுக்கு பிறகு ஏற்ற உணவு உண்ணலாம்.
  10.  மாலையில் பயிற்சி செய்வதாக இருந்தால், கடைசியாக சாப்பிட்டது கடின உணவனால் நான்கு மணி நேரத்திற்கு பிறகு இப்பயிற்சிகளை செய்யலாம். கடைசியாக காபி தேநீர் குடித்த அரை மணி நேரத்திற்கு பிறகு இப்பயிற்சிகளை செய்ய தொடங்க வேண்டும்.
  11. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் கழித்துதான் இப்பயிற்சிகளை தொடங்கவேண்டும்.
  12. குடலிறக்கம், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளவர்கள் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் கபாலபதி பயிற்சி செய்ய வேண்டாம் மற்ற எல்லா பயிற்சிகளையும் மெதுவாக செய்யவேண்டும்.
  13.  இதய நோய் உள்ளவர்கள் எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் ஆலோசனைகளை பெற்று அவற்றின்படி பயிற்சிகளை செய்ய வேண்டும்.

பெண்களுக்கு உரிய குறிப்புகள்:

1. மாதவிடாய் காலத்தில் பெண்கள் இப்பயிற்சிகளை செய்ய வேண்டாம்.

2. கருவுற்ற பெண்கள் கீழ்க்கண்ட பயிற்சிகளை செய்ய கூடாது. மூச்சுப் பயிற்சிகளில் வஜ்ராசனத்தில் செய்யக்கூடிய நிலை வேண்டாம். மகராசனம் முதல் பகுதி இரண்டாம் பகுதி முழுவதும் வேண்டாம். மற்ற எல்லா பயிற்சிகளையும் பேறு காலம் வரையில் செய்யலாம்.

3. உடல் நலம் சீராக இருந்தால் அதிலிருந்து மூன்று மாதங்கள் கழித்த பிறகு எல்லா பயிற்சிகளையும் செய்யலாம்.

4. அறுவை சிகிச்சை சிசேரியன் செய்து இருந்தால் சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் கழித்து பயிற்சிகளை செய்யலாம்.

  1. கை பயிற்சியின் நன்மைகள்:

1. கைகளில் ரத்த ஓட்டம், காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், உயிர் சக்தி ஓட்டம் இவை ஏற்படுகின்றன.

2. கீல்வாதம், உறங்கும்போது மேல் உறுப்புகள் மரத்துப்போதல் இவை குணமாகின்றன.

3. கைகளும் தோள்களும் பலமடைகின்றன 

4. நுரையீரல்கள் சுறுசுறுப்படைகின்றன. வாத நோய்கள் கட்டுப்படும்.

5. கை நடுக்கம் , குடைச்சல்  குணமடைகின்றன.

6.  தோள்பட்டை வலி, முழங்கால் வலி, குணமடைகின்றன.

7.  இடுப்பு பிடிப்பு வலி முதலியன குணமடைகின்றன.

8.  மூட்டு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.

9.  மூளை சுரப்பிகள், நரம்பு மண்டலம் சுறுசுறுப்படைகிறது.

  1. கால் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்:
  1. கால்கள் பலம் அடைகின்றன.
  2. வயிற்றில் எல்லா பகுதியிலும் ரத்த ஓட்டம் சீரடைகிறது.
  3. கீழ்வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்பு வலி குணமடையும், வராமல் தவிர்க்கப்படும்.
  4. முதுகெலும்பை வருடுவதன் மூலம் அதிலிருந்து புறப்படும் நரம்புகள் ஊக்குவிக்கப்பட்டு மூத்திரக்காய் மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் இயக்கம் நன்கு அமைகிறது.
  5. உடலின் முக்கியமான பகுதிகளான இருதயம், சுவாசப்பை, குடல், மூளை சுரப்பிகள் போன்றவற்றுடன் நரம்பு மூலம் பாதங்களுக்கு தொடர்புள்ளது. பாதங்கள் மற்றும் கால் விரல்கள் அழுத்தப்படுவதால் (அவற்றின் இயக்கம் நரம்புகள் மூலம் ஊக்குவிக்க) நன்கு சுறுசுறுப்புடன் இயங்க வகை செய்கிறது.

3.  நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியின் நன்மைகள்:

  1. அடிவயிற்றுப் பகுதி சுறுசுறுப்படைகிறது.
  2. பயிற்சிகளை தொடர்ந்து செய்து வர தொந்தி குறைய வாய்ப்பு உள்ளது. குடல் பகுதிகளில் இயக்கம் சீரடைகிறது .
  3. சுவாசப்பையில் ஒவ்வொரு பகுதியும் நன்கு விரிவடைவதால், அதன் ஒவ்வொரு சுற்றிலும் காற்று புகுந்து சுவாசப்பையில் இயக்கம் சுறுசுறுப்படைகிறது. உடலின் எல்லா செல்களுக்கும் போதுமான அளவு பிராண வாயு கிடைக்கிறது. 
  4. தொடர்ந்து செய்துவரும்போது நுரையீரலின் காற்று உட்கொள்ளும் திறன் சாதாரண நிலையிலும் அதிகமாகி சுவாசப்பையில் பிராண வாயு அதிகரித்து, அதனால் ரத்தம் சுத்தமாகிறது. எனவே உயிர் சக்தி பெருகுகிறது.
  5. இந்த நரம்பு தசை நார் சுவாசப் பயிற்சி முறையில் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து சுரப்பிகளும் பிராணவாயு சென்று சேர்கிறது.
  6.  ஆஸ்துமா, கீழ்வாயு, மறதி சோம்பல் அடிக்கடி சளி பிடித்தல் சைனஸ் தொந்தரவு முதலியன நீங்கும்.
  7. நாள் முழுவதும் வேலை செய்தாலும் சோர்வு இருக்காது.
  8. நரம்பு மண்டலம், காற்று மண்டலம், தசை மண்டலம் இவற்றில் உள்ள நோய்கள் நீங்கும்.
  9. உயிர் சக்தி பெருகுவதன் விளைவாக தலை வலி, உறக்கமின்மை, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் குணமாகின்றன. 
  10. மன நோய், கால், கை வலிப்பு போன்ற நோய்கள் கூட குணமாகின்றன. 
  11. பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கிரகிக்கும் திறன், கொள்ளும் திறன், நினைவுகூறும் திறன் ஆகியவை அதிகரித்து படிப்பது எளிதாகி, தேர்வுகளில் மதிப்பெண் கூடும். 
  12. மாணவர்களிடத்தில் ஒழுக்க மேம்பாடு இயல்பாகவே உருவாகும். 

4. கண் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்:

  1.  கண்மணி என்னும் பாப்பாவை சுற்றியுள்ள தசைகளை இப்பயிற்சி இயங்கச் செய்வதால் கண்ணில் உள்ள லென்ஸ் வடிவம் சீரடைகிறது. இதன் மூலம் கண்பார்வை மேம்படும்.
  2. தொடர்ந்து செய்து வந்தால் கண்ணாடி போட்டு உள்ளவர்களுக்குக் கூட அது தேவை இல்லாமல் போய்விடும். 
  3. கண்நோய்கள் வலி எரிச்சல் வராமல் தடுத்து குணப்படுத்தும்.

5. கபாலபதியின் நன்மைகள்:

  1. சைனஸ் தொந்தரவு நீங்கும்.
  2. ஈசனோபீலியா நோய் நீங்கும்.
  3.  மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல்களில் இருக்கக்கூடிய தூசி முதலிய வேற்று பொருட்கள் வெளியேறும்.
  4. உடலுக்கு சுறுசுறுப்பு வரும்.
  5. மூளைக்கு ரத்தம் நன்கு பாயும்
  1. மகராசன் பயிற்சியின் நன்மைகள்:

1. சுரப்பிகளின் பணிகள் ஒழுங்கு படுத்தப் படுகின்றன.

2. உடல் முழுவதும் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சீரடைகிறது.

3.  நீரழிவு வியாதி கீல் வாதம், நரம்பு வலி, ரத்த அழுத்தம், இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி முதலியவை குணமாகின்றன.

4. சதை குறையும்; உடல் உறுதிப்படும்; தொப்பை குறையும்.

5. முதுகெலும்பு கீழ் இருந்து படிப்படியாக முறுக்குவது போன வைக்கப்படுவதால் முதுகெலும்பும் தண்டுவட பகுதிகள் வலுவடைகின்றன. உடல் இளமையாக இருக்க இது உதவுகிறது.

6. முதுகெலும்பிலிருந்து உடல் முழுவதும் செல்லும் நரம்பு மண்டலம் வலுப்பெற்று சீராகிறது.

7. கால்களும் வயிற்றுப் பகுதியும் பலம்பெறுகின்றன.

8. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் சீராகும். நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சீரடைவதால் கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

9. மகப்பேறு எளிதாகவும் மலட்டுத்தன்மை ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி நீங்க உதவும்.

10. உடல் சோர்வு நீங்கி உடலில் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.

குறிப்பு: கருவுற்ற பெண்கள் மகராசத்தின் இரண்டு பகுதி பயிற்சிகளையும் செய்யக்கூடாது.

  1. உடலை தேய்த்து விடுதல் நன்மைகள்:

1. வயிறு நெஞ்சு பகுதிகளில் ஜீவகாந்த ஓட்டம் சீர்படும்.

 உள்ளுறுப்புக்கள் பலப்படும்.

2. காது பகுதிகளில் உள்ள இயக்கங்கள் சீர்படுத்தப்படும்.

 காதில் உள்ள குறைகள் நீங்க உதவும்.

3. முகத்தில் ரத்த ஓட்டம் முதலானவை சீர்பட்டு முகம் பொலிவு பெறும்.

  1.  உடலை அழுத்தி விடுதல் அக்குபிரஷர் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்:

1. இந்த பயிற்சியினால் உடலில் உள்ள மின்சார ஓட்டம் சீராகிறது.

 உடலில் மின்சார தடை இருந்தாலும் நீங்கிவிடும்.

2. இருதய நோய்க்கு சிறந்த காப்பு முறை இது. அதிக ரத்த அழுத்தம் குறையும். 

3. நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தி சீராக இயங்கச் செய்கிறது. 4.நரம்புகளின் தன்மையை குறைக்கிறது. 

5. நல்ல உறக்கம் வரும். தொடர்ந்து செய்துவர தூக்கமின்மை நீங்க உதவும்.

9.  உடலை தளர்த்துதல் அல்லது ஓய்வு தரும் பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்:

1. இந்த ஓய்வு தரும் பயிற்சியினால் ரத்தம் அழுத்தம் குறையும்.

2.  ஒழுங்காக தொடர்ந்து பயின்றான் இருதய பாதிப்பு வராமல் தடுக்கலாம். 3. ஒருமுறை பாதிப்பு வந்தாலும் அடுத்தடுத்த பாதிப்பு வராமல் தடுக்க உதவும்.

4. உடலிலும் மனதிலும் ஏற்படும் எரிவு நிலை (tension) மாறி அமைதி உண்டாகும்.

5. உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. உடலுக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கும்.

குறிப்பு: இரவில் உறக்கம் இல்லாதவர்கள் அக்குபிரஷர் பயிற்சியுடன் உடலை தளர்த்துதல் அல்லது ஓய்வு தரும் இந்த பயிற்சியை செய்தால் உடனே உறக்கம் வந்துவிடும்